Skip to main content

இலக்கியங்கள் போற்றும் இந்திர தெய்வம் பாகம் 2

 



'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே என புற நானூற்றுப்பாடல்

இந்திரனின் கோவிலை வச்சிரத்தடக்கை(வச்சிராயுதம்) நெடியோன் கோவில் என குறிப்பிடுகிறது.


வேந்தன் மேய தீம்புனல் உலகம் எனத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசும் மருத த்தின் தெய்வம் . தேவர்களின் தலைவனும் அவரே. வான்மழையின் கடவுளும் அவரே

 கார்காலத்தில் பெருமழைக்குப்பின் வானில் தோன்றும் வானவில்லை இந்திர வில் என்று அழைப்பர்.

நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக க் கொண்டு விளங்கியது அந்நாளைய மருத நிலம். ஆகவே தீம்புனல் உலகம் என்று பெயர் பெற்றது.

சங்க காலத்தில் மருத நில மக்கள் இந்திரனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து இந்திர தெய்வத்தை போற்றினர். அதனை இந்திரவிழா என்று அழைத்தனர்.

திருக்குறளில் கையாளப்பட்ட வேந்தன் என்ற சொல் பல குறள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்

Comments

Popular posts from this blog

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண்மூர்த்தீஸ்வரர் ஆலய கோபுரத்தில் இந்திரன் தெய்வம்

  சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ண்மூர்த்தீஸ்வரர் ஆலய கோபுரத்தில் இந்திரன் தெய்வம் கண்டதேவி திருக்கோவில் விமான கோபுரத்தில் வெள்ளையானையில் வீற்றிருக்கும் தேவேந்திர தெய்வம். 

இந்திர பாசுரம் ( இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூர் எடுத்த காதை)

  இந்திர தெய்வத்தின் இந்திர விழா பாசுரம்  ( சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்) இந்திரவிழவு ஊர் எடுத்த காதை   "சூரியன் உதித்தல்"   அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, அலைநீர் ஆடை, மலை முலை ஆகத்து, ஆரப் பேரியாற்று, மாரிக் கூந்தல், கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை புதை இருள் - படாஅம் போக நீக்கி, உதைய மால் வரை உச்சித் தோன்றி, உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி - இரு பெரு வேந்தர் முனையிடம் போல இரு பால் பகுதியின் இடை நிலம் ஆகிய கடை கால் யாத்த மிடை மரச் சோலை, கொடுப்போர் ஓதையும், கொள்வோர் ஓதையும், நடுக்கு இன்றி நிலைஇய நாள்-அங்காடியில்- சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, ‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என, தேவர் கோமான் ஏவலின் போந்த காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை- புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும், பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து; துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடி; ‘பெரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி; வசியும், வளனும், சுரக்க’ என வாழ்த்தி; மாதர்க் கோலத்து, வலவையின் உரைக்கும், மூதில் பெண்டிர் ஓதையின் பெயர- வச்சிரக் ...